மத்திய அரசின் முயற்சிக்கு கை மேல் பலன்! BSNL மற்றும் MTNL நிறுவனங்களை இலாபத்தில் இயங்க வைத்தது எப்படி?

மத்திய அரசின் முயற்சிக்கு கை மேல் பலன்! BSNL மற்றும் MTNL நிறுவனங்களை இலாபத்தில் இயங்க வைத்தது எப்படி?

Update: 2021-01-12 09:15 GMT

புத்தாக்கத் திட்டத்தின் ஒரு வருடத்திற்குள், அரசு நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடன் தொகைக்கு முன்பான வருவாயில் (எபிட்டா) வளர்ச்சியை எட்டியுள்ளன.

பிஎஸ்என்எல்-லைப் பொருத்தவரை, செப்டம்பர் 2019 உடன் முடிந்த அரையாண்டில் மைனஸ் 3596 கோடி ரூபாயாக இருந்த எபிட்டா, தற்போது நேர்மறையில் ரூபாய் 602 கோடியாக உள்ளது. எம்டிஎன்எல்-லைப் பொருத்தவரை, செப்டம்பர் 2019 உடன் முடிந்த அரையாண்டில் மைனஸ் 549 கோடி ரூபாயாக இருந்த எபிட்டா, தற்போது நேர்மறையில் ரூபாய் 276 கோடியாக உள்ளது.

தொலைத்தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்த தகவல்களின் படி, 2019-20 உடன் ஒப்பிடும்போது, இரு நிறுவனங்களும் தங்களது நஷ்டத்தை 50 சதவீதம் வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாமாக முன்வந்து ஓய்வு பெறும் திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளின் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது. பிஎஸ்என்எல்-லில் சுமார் 50 சதவீத பணியாளர்களும், எம்டிஎன்எல்-லில் சுமார் 75 சதவீத பணியாளர்களும் குறைக்கப் பட்டுள்ளனர். பிஎஸ்என்எல்-லால் தனது வருவாயை தக்க வைத்துக்கொண்டு இதர செலவுகளைக் குறைக்க முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்திரங்களின் மூலம் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்-லும் வெற்றிகரமாக நிதியைத் திரட்டி உள்ளன. எம்டிஎன்எல்-லின் சமீபத்திய பத்திர வெளியீடு, மூன்று முறைக்கு அதிகமாகவும், பிஎஸ்என்எல்-லின் சமீபத்திய பத்திர வெளியீடு இரண்டு முறைக்கு அதிகமாகவும் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய மற்றும் முக்கியமில்லாத சொத்துக்களின் மூலம் 2019-20-ஆம் ஆண்டில் ரூபாய் 1830 கோடியை எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் திரட்டி உள்ளதாக தொலைதொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் இது ரூபாய் 3 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News