30 நிமிடத்தில் மெட்ரோ ரயில் மூலம் சென்றடைந்த இதயம்.. தெலங்கானா மருத்துவர்கள் அசத்தல்.!

30 நிமிடத்தில் மெட்ரோ ரயில் மூலம் சென்றடைந்த இதயம்.. தெலங்கானா மருத்துவர்கள் அசத்தல்.!

Update: 2021-02-03 08:38 GMT

தெலங்கானா மாநிலத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு இதயத்தை மெட்ரோ ரயில் மூலம் மருத்துவர்கள் எடுத்து சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தெலங்கானா, வாரங்கலை சேர்ந்தவர் விவசாயி நரசிம்மா, இவர் சமீபத்தில் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை அவரது உறவினர்கள் தானம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் நரசிம்மாவின் இதயம் மற்றும் கல்லீரம் உட்பட 8 உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. இந்நிலையில், இதயத்தை மட்டும் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இயங்கிவரும் மருத்துவமனையில் ஒருவருக்கு பொருத்துவதற்கு மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து சாலை வழியாக இதயத்தை எடுத்து சென்றால் போக்குவரத்து காரணமாக நேரம் அதிகமாகும் என்று யோசித்த மருத்துவர்கள் இதயத்தை மெட்ரோ ரயில் மூலமாக எடுத்து செல்வதற்கு முடிவு செய்தனர். இதயத்தை எல்.பி. நகர் பகுதியில் இருந்து ஜுப்ளி ஹில்ஸ் பகுதிக்கு 30 நிமிடங்களில் எடுத்து சென்றனர். இதற்கு போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News