இனி அக்னிபத் தொடர்பான வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும் - விவரம் என்ன?

'அக்னிபத்' திட்டம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தில் இருந்து டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

Update: 2022-07-21 11:19 GMT

'அக்னிபத்' திட்டம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தில் இருந்து டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.


கடந்த மாதம் 'அக்னிபத்' என்ற திட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு அறிமுகம் செய்தது, இதன் மூலம் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை ராணுவத்திற்கு சேர்க்கும் திட்டத்தை அறிவித்தது. இதன் மூலம் நிறைய இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் எனவும் மேலும் ராணுவத்திலிருந்து வெளியே வரும் பட்சத்தில் அவர்களுக்கு உதவி தொகைடன் தொழில் தொடங்கவும், அரசு பணிகளில், கார்ப்பரேட் நிறுவனங்களில் சேரவும் உபயோகமாக இருக்கும் எனவும் மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் வழக்கம் போல் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு உயர்நீதிமன்றங்களிலும் இந்த திட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.


'அக்னிபத்' திட்டம் தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகள் குறித்த விசாரணை சமீபத்தில் நீதிபதிகள் சந்திர சூட் மற்றும் போப்பண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது.


அப்போது பேசிய நீதிபதிகள் 'அக்னிபத்' திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது என்றனர்.

மேலும் இந்த மனுக்கள் குறித்து விசாரணையை முதலில் டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்து உத்தரவிடட்டும் அந்த உத்தரவில் எங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெரிவித்து இருந்தனர். இனி இதன் மூலம் 'அக்னிபத்' திட்டம் தொடர்பாக இனி யார் வழக்கு தொடர்ந்தாலும் அவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தை மட்டுமே அணுக வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Source - Junior Vikatan

Similar News