மாணவர்களுக்கு எளிதில் லோன் கிடைக்க புதிய ஏற்பாடு செய்த மத்திய அரசு.!

12ம் வகுப்பு முடித்த மாணவர்கள், பொறியியல், மருத்துவம் மற்றம் மற்ற பட்டப்படிப்பு படிப்பதற்கு தேவையான கடன் பெறுவதற்கு இனி வங்கி வாசலில் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை.

Update: 2021-07-27 04:05 GMT

12ம் வகுப்பு முடித்த மாணவர்கள், பொறியியல், மருத்துவம் மற்றம் மற்ற பட்டப்படிப்பு படிப்பதற்கு தேவையான கடன் பெறுவதற்கு இனி வங்கி வாசலில் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை.

எனவே மாணவர்கள் நலன் கருதி, புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்விக்கடனுக்காகவே, 'பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்' (Pradhan Mantri Vidyalakshmi Karyakram) என்ற இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த தளத்தில் இருந்து இனிமே அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பிவைக்க வேண்டும். மாற்றாக எந்த வங்கியும் தனிப்பட்ட முறையில் கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது.


இது குறித்து கடந்த பிப்ரவரி 21ம் தேதி மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை, 'பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்' எனும் இணையதளம் மூலமாகவே பரிசீலனை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

எனவே 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் மேற்படிப்பு படிப்பதற்கு வசதியில்லாத ஏழை, எளிய மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பங்களை முறைப்படி பூர்த்தி செய்து அனுப்பினால் எந்த வங்கியில் கடன் பெறுகின்ற விபரத்தை அனுப்பினால் அந்த வங்கியில் இருந்து முறைப்படி மாணவர்கள் வீடுகளுக்கு கடிதம் அனுப்பி தகவல் தெரிவிக்கப்படும்.

Similar News