ஹிஜாப் சர்ச்சை: 'அல்லாஹு அக்பர்' என்று முழங்கிய மாணவியின் தந்தை யார் தெரியுமா? வெளியான பரபரப்பு தகவல்!
கர்நாடகா ஹிஜாப் சர்ச்சையில் அல்லாஹு அக்பர் என்று முழங்கிய இஸ்லாமிய மாணவியின் தந்தை, PFI எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்புடன் தொடர்புடையவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை. இச் சர்ச்சை சர்வதேச ஊடகங்களால் கவனிக்கப்பட்டு உலக கவனமும் பெற்றுவிட்டது. இந்த ஹிஜாப் சர்ச்சையின் போது பெருந்திரளாக நின்று கொண்டு "ஜெய் ஸ்ரீ ராம்" என்று முழக்கமிட்ட இந்து மாணவர்களுக்கு எதிரே, ஒற்றை பெண்ணாக நின்று "அல்லாஹு அக்பர்" என்று முழங்கிய 'முஸ்கன் சைனப்' என்ற இஸ்லாமிய மாணவி பிரபலமடைந்து விட்டார்.
இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மாணவியை கொண்டாடி வருகின்றனர். இதன் வரிசையில் மகாராஷ்டிரா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சித்திக் என்பவர், "அல்லாஹு அக்பர்" என்று முழங்கிய மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று, அம்மணவிக்கு ஐபோன் மற்றும் ஸ்மார்ட் வாட்சை பரிசாக அளித்தார். மேலும் பலரும் மாணவிக்கு பாராட்டுகளும் பரிசுகளும் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் 'டைம்ஸ் நவ்' செய்தி நிறுவனம் வெளியிட்ட பரபரப்புச் செய்தியில், முஸ்கன் சைனாபின் தந்தை 'அப்துல் சுக்கர்' , மாவட்ட PFI (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) என்ற இஸ்லாமிய அமைப்பின் மாவட்ட தலைவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இத்தகவல் மூலம் ஹிஜாப் சர்ச்சையின் உண்மை முகம் தெளிவாக தெரிய வருகிறது.