அசாமில் கிறிஸ்துவ மத உணர்வாளர்களால் வெட்டப்பட்ட புனித ஆலமரம் ! அதே இடத்தில சிவ லிங்கத்துடன் ஆலமரக்கன்று நட்ட இந்து அமைப்பினர் !
அசாமில் கிறிஸ்தவ மத உணர்வாளர்களால் வெட்டப்பட்ட 250 ஆண்டுகள் வயதுடைய ஆலமரம் இருந்த இடத்தில் சிவலிங்கம், திரிசூலம் மற்றும் புதிய ஆலமரக் கன்றை அப்பகுதி இந்துக்கள் நட்டு வைத்தனர்.
நவம்பர் 17 அன்று அசாம் மாநிலத்தில் மகாதேவ்தில்லா என்ற இடத்தில் 250 ஆண்டுகள் வயதுடைய ஆலமரத்தை கிறிஸ்தவ மத உணர்வாளர்கள் வெட்டியுள்ளனர். இது அப்பகுதி இந்துக்களை மனவேதனையடையச் செய்தது
இச்செய்தியை அறிந்த, அப்பகுதி இந்து இயக்கங்களான ஹிந்து ராக்ஷி தால் மற்றும் சத்ர சங் போன்ற இயக்கங்கள் இப்பிரச்சனையை கையில் எடுத்தனர், உடனடியாக மாவட்ட காவல் துறை துணை ஆணையருக்கு இது குறித்து மனு அளித்தனர்.
இந்நிலையில் நவம்பர் 29 அன்று 100-க்கும் மேற்பட்ட ஹிந்து ராக்ஷி தால் அமைப்பினர். எந்த இடத்தில் அந்த 250 ஆண்டுகள் வயதுடைய ஆலமரம் வெட்டப்பட்டதோ அதே இடத்தில் , சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, மந்திரங்கள் பாடி. ஆலமர மரக்கன்று ஒன்றை விதைத்தனர்.
சமீப காலமாக நாடு முழுவதும், இந்து மத அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருவது இந்துக்கள் மத்தியில் மனவேதனை அடைய செய்துள்ளது.