இந்து மாணவரை 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கூறச் சொல்லி துப்பாக்கி முனையில் மிரட்டல்!

Update: 2022-10-09 02:52 GMT

 உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இந்து மாணவரைக் கடுமையாகத் தாக்கிய இஸ்லாமிய மாணவர், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷத்தை எழுப்பும்படி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

புலாந்துசாஹர் மாவட்டம் கரன்வாஷ் கிராமத்தைச் சேர்ந்தவர் சாகேத் குமார். இவர் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரின் சக மாணவரான ரெஹ்வர் இவர் கட்டியிருந்த சாமிக் கயிற்றை அவிழ்க்கக் கூறி வற்புறுத்தியுள்ளார்.

அவர் மறுத்ததும், சாகேத்தை கத்தியை வைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து காவல்துறை எஸ்பி குல்தீப் குனாவட் கூறுகையில் , "சாகேத் பல்கலைக்கழகத்தில் சுலைமான் ஹாலில் இருந்துள்ளார். அப்போது ரெஹ்வர் போதையில் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், சாகேத் அணிந்திருந்த கயிற்றை அவிழ்க்க மிரட்டியுள்ளார். 

 மேலும் பாகிஸ்தானை வாழ்த்தும்படி வற்புறுத்தினார் மற்றும் அவரை மிரட்டினார். துப்பாக்கி, குற்றம் சாட்டப்பட்டவர் தனது சகோதரியை ஹிஜாப் அணியுமாறு மிரட்டியதாகவும் சாகேத் கூறினார்.

Input From: ETV

Similar News