மதரசாவில் ஜிகாத் குறித்து கற்றுத்தருவதாக சிறுவன் கூறும் அதிர்ச்சி வீடியோ - இந்து கடவுள் குறித்து சொல்லித்தரப்பட்ட பகீர் தகவல்!
ஜூன் 5 அன்று, Voice of Bangladeshi Hindus என்ற டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டது. அதில் முஸ்லீம் சிறுவன் வங்காளதேசத்தில் மதர்சாக்களின் போதனைகளை பற்றி விளக்கினான்.
வீடியோவில், பதிவு செய்து கொண்டிருந்தவர் இந்துக்கள் குறித்து கேட்டதற்கு, 'இந்துக்கள் அழுக்கு' என, சிறுவன் கூறியதாகவும், காரணம் கேட்டதற்கு, 'சிலைகளை வணங்குவதால்,' என, கூறியுள்ளான்.
ஒரு நிமிட வீடியோ வங்காள மொழியில் இருந்தது. தன்னை ஆரிப் என்று அடையாளம் காட்டிய சிறுவன், வங்கதேசத்தில் உள்ள மதர்சாவில் படித்து வருகிறான். இந்துக்கள் அழுக்காக இருக்கிறார்களா அல்லது நல்லவர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு, 'அழுக்கு', அவர்கள் சிலைகளை வணங்குகிறார்கள்' என காரணத்தையும் கூறினார். அப்போது அவரிடம் சிலை வணக்கத்தில் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு, 'அது ஹராம்' என்றார். அவரைப் பொறுத்தவரை, 'ஹராம்' செயல்களில் ஈடுபடுபவர்கள் இந்துக்கள் என மதரசாவில் கற்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீடியோவை பதிவு செய்த நபர், மதர்சாவில் வேறு என்ன கற்றுக்கொண்டார் என்று ஆரிப்பிடம் கேட்டார். அவர், 'ஜிஹாத் பற்றி' என்றார். ஜிஹாத்தின் வரையறையைக் கேட்டபோது, "முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிரான போர்" என்றார். அவரிடம் மதர்ஸா ஆசிரியர் ஜிஹாத் பற்றி அனைத்தையும் கற்றுக் கொடுத்தாரா என்று கேட்க, அவர் 'ஆம்' என்று பதிலளித்தார்.
Inputs From: Opindia