வரலாற்றை திருத்தி எழுதுவதை யாரும் தடுக்க முடியாது: அமித்ஷா எதைக் குறிப்பிடுகிறார்?
வரலாற்றை திருத்தி எழுதுவதை யாரும் தடுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டு இருக்கிறார்..
நமது நாட்டின் வரலாற்ற ஆய்வு செய்து அவற்றை திருத்தி எழுத வேண்டும் என்றும், அப்படி திருப்பி எழுதுவதை யாரும் தடுக்க முடியாது என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். அசாமைச் சேர்ந்த 17ஆம் நூற்றாண்டு போர் தளபதியான லசித் போர்புகான் என்பவரின் 400ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா டெல்லியில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் கூறுகையில், நான் ஒரு வரலாற்று மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன். வரலாறு பல்வேறு மன்னர்களால் திரிக்கப்பட்டுள்ளதாக நான் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் நாம் அதை சரி செய்ய வேண்டும். நமது வரலாற்று திருத்தி பெருமையுடன் எழுத வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் மத்திய அரசின் இந்த ஒரு முயற்சியை யாராலும் தடுக்க முடியாது என்று பெருமையுடன் மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். சுதந்திர போராட்டத்தில் தாய் நாட்டிற்காக போராடியவர்களின் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். வரலாற்றை திருத்தி சரியாக எழுதினால், பொய் தானாகவே மறைந்துவிடும். இங்கு இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும் ஒரு கோரிக்கை முன் வைக்கிறேன் என்று மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்த ஒரு கோரிக்கை என்னவென்றால், 150வது ஆண்டு கால ஆட்சி செய்த 300 பேரரசுகளை பற்றி நீங்கள் ஆய்வு செய்யுங்கள். அதேபோல் விடுதலைக்காக போராடிய 300 வீரர்களை கண்டு அறிந்து ஆய்வு செய்யுங்கள். உண்மையான ஆய்வு செய்து, வரலாற்றை திருத்தி எழுதுங்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். எனவே எங்களுடைய ஆட்சியில் வரலாற்றை திருத்தி எழுதுவதை யாரும் தடுக்க முடியாது. அந்த ஆய்வுக்கு மத்திய அரசு உதவி செய்ய தயாராக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
Input & Image courtesy: Dinamalar News