வீடு, வாகன கடன் வட்டி: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.!

வீடு, வாகன கடன் வட்டி: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.!

Update: 2021-02-05 13:24 GMT

இந்திய ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை கூட்டம் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், மற்றும் பொருளாதார நிலை, ரூபாய் மதிப்பு நிலவரம் உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்ட நிலையில், இன்று ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது.

இது பற்றி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

4வது முறையாக வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி எடுக்கும். தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்க கடன்பெறும் சூழலை ரிசர்வ் வங்கி தொடர்ந்து அளிக்கும் என கூறினார்.
 

Similar News