கங்குலி வீட்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா'விற்கு இரவு விருந்து
முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி வீட்டில் அமைச்சர் இரவு உணவு சாப்பிட்டார்
முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி வீட்டில் அமைச்சர் அமித்ஷா இரவு உணவு சாப்பிட்டார்
மேற்கு வங்க மாநிலம் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார், இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி வீட்டிற்கு சென்ற உள்துறை அமைச்சா் அவருடன் இரவு உணவு சாப்பிட்டார்.
இதுகுறித்து கங்குலி தெரிவித்துள்ளதாவது, 'மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களை 2008 ஆம் ஆண்டிலிருந்து எனக்குத் தெரியும் அவர் மகன் என்னுடன் பணியாற்றி வருகிறார். எனது வீட்டில் இரவு உணவில் கலந்து கொள்ள வரும்படி அழைத்தேன் அவனை ஏற்றுக் கொண்ட வந்த அவருக்காக சைவ உணவு தயார் செய்திருந்தேன்' இவ்வாறு அவர் கூறினார்.