நாட்டின் ஒற்றுமைக்கு ஒரே மாதிரியான கலாசாரம், மொழி, மதம் தேவையில்லை - மோகன் பகவத்!

Update: 2022-04-24 02:15 GMT

அகமதாபாத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியாவின் ஒற்றுமைக்கு ஒருமைப்பாடு தேவையில்லை.

மேலும், நமது நாட்டில் பல மொழிகள் பேசப்பட்டாலும் அனைவரும் ஒன்றாக கூடியுள்ளோம் என்றார். அது மட்டுமின்றி இந்தியாவில் 3,800க்கும் மேற்பட்ட பேச்சு வழக்குகள் வழக்கத்தில் உள்ளது. இந்தியாவை போன்று வேறு எந்த நாடும் இருந்ததில்லை.

நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் எனு பிற நாட்டை சேர்ந்தவர்கள் சொல்வார்கள். ஆனால் அப்படி சொல்லியிருக்க தேவையில்லை. இந்தியாவின் ஒற்றுமை பலவாறாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை என்று அழைக்கிறோம். அதே சமயம் ஒரே மாதிரியான கலாசாரம், மொழி, மதம் போன்றவைகள் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News