பத்மபூஷன் விருதைப் பெற்ற மைக்ரோசாஃப்ட் CEO: இந்தியாவைப் பற்றிக் கூறிய கருத்து!
பத்மபூஷன் விருதை பெற்ற மைக்ரோசாஃப்ட் CEO தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாக பத்மபூஷன் விருது விளங்குகிறது. இந்தியாவில் தலைசிறந்த உயரிய விருதாக பத்மபூஷன் விருது கருதப்படுகிறது. அந்த வகையில் தற்பொழுது இந்த ஆண்டு, இந்தியா தனது 73வது குடியரசு தினத்தில், மைக்ரோசாஃப்ட் CEO நாதெல்லா, கூகுள் CEO சுந்தர் பிச்சை மற்றும் டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்து உள்ளது. இந்தியாவில் வழங்கப்படும் உயரிய சிவிலியன் விருதுகள் மூன்றாக பிரிக்கப்படுகிறது பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் அமைக்கப்படும் பத்ம விருதுகள் குழுவின் கீழ் இந்த விருது பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த வருடம் பத்மபூஷன் விருதை பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் CEO சத்யா நாதெல்லா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த விருதைப் பற்றி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இதைப் பற்றி அவர் கருத்து கூறுகையில், "இந்த விருதை நான் பெற்றதில் பெருமை அடைகிறேன். இது எனக்கு கிடைத்தது பெருமை என்றும், பல அசாதாரண மனிதர்களுடன் அங்கீகாரம் பெற்றதும் பெருமையாக இருக்கிறது. குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் இந்திய மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்தியா முழுவதும் உள்ள மக்களுடன் இணைந்து, இதுபோன்ற மேலும் பல சாதனைகளை அடைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அவர்களுக்கு தொடர்ந்து பணியாற்ற நான் காத்திருக்கிறேன்" என்று நாதெல்லா அவர்கள் ட்வீட் செய்துள்ளார். இந்தியாவில் ஹைதராபாத்தில் பிறந்த சத்யா நாதெல்லா அவர்கள் 2014ம் ஆண்டு அன்று மைக்ரோசாஃப்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக(CEO) பொறுப்பேற்றார். மேலும் ஜூன் 2021 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைவராகவும் இவர் பொறுப்பேற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy:NDTV news