அனைவருக்கும் வீடு திட்டம்.. தமிழகத்தில் 1,152 வீடுகளுக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.!

அனைவருக்கும் வீடு திட்டம்.. தமிழகத்தில் 1,152 வீடுகளுக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.!

Update: 2021-01-01 13:50 GMT

வீடு இல்லாதவர்கள் யாருமே இருக்கக்கூடாது என்ற நிலையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அந்த திட்டம் தற்போது நாடு முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் புதிய தொழில் நுட்பத்தில் வீடு கட்டும் திட்டத்துக்காக, பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

6 மாநிலங்களில் உள்ள ஆறு நகரங்களில் சர்வதேச வீட்டு வசதித் தொழில்நுட்ப சவால் இந்தியா திட்டத்தின் கீழ் கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

பிரதமர் இன்று அடிக்கல் நாட்டி உள்ள திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கட்டப்படும் மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை 1,152 ஆகும்.
இதன் மொத்த மதிப்பீடு ரூ.116 கோடியே 26 லட்சம் ஆகும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.63 கோடியே 36 லட்சம் ஆகும். மாநில அரசின் பங்கு ரூ.35 கோடியே 62 லட்சம் ஆகும். பயனாளிகளின் பங்கீடு ரூ.17 கோடியே 28 லட்சம் ஆகும்.

அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News