தமிழகத்தில் 917 ஆக இருந்த பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம், 943 ஆக அதிகரித்தது எப்படி? பெண்களுக்கான வளர்ச்சி திட்டம்!

தமிழகத்தில் 917 ஆக இருந்த பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம், 943 ஆக அதிகரித்தது எப்படி? பெண்களுக்கான வளர்ச்சி திட்டம்!

Update: 2021-02-13 07:15 GMT

பெண்கள் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தவும், பெண் குழந்தைகளுக்கான நல திட்டத்தின் நிர்வாக அமைப்புகளாக செயல்படவும் மகிளா சக்தி கேந்திரா திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசு ஒப்புதல் அளித்தது.

அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் சீரடைந்து வருகிறது. 2014-15-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 917 ஆக இருந்த பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம், 2019-20-ஆம் ஆண்டில் 943 ஆக அதிகரித்தது.

ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதிய திட்டம், சுவதர்கிரேஹ் திட்டம் மற்றும் விதவைகளுக்கான இல்லங்கள் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் 60:40 என்னும் விகிதத்தில் பங்கிட்டுக் கொள்கின்றன. வட கிழக்கு மாநிலங்களில் இது 90:10 என்னும் அளவிலும், யூனியன் பிரதேசங்களில் 100 சதவீத நிதியை மத்திய அரசு ஏற்கும் வகையிலும் இத்திட்டம் அமைந்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாட்டை தடுப்பதற்கும், ஊட்டச்சத்து உணவுகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கிடைப்பதற்கும் அரசு உயர் முக்கியத்துவம் அளிக்கிறது.

அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்காக 8.66 லட்சம் ஸ்மார்ட் கைபேசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

அங்கன்வாடிகளை நவீனமயமாக்குவதற்கான முயற்சியில், நான்கு லட்சம் அங்கன்வாடி மையக் கட்டிடங்களை கட்டுவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் வெளியிட்டது.

தண்ணீர் வசதிகளுக்காக ஒரு அங்கன்வாடி மையத்திற்கு ரூ.10,000-ம், கழிவறை வசதிகளுக்காக ஒரு அங்கன்வாடி மையத்திற்கு ரூ. 12,000-ம் வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கான போக்சோ சட்டம் 2019-ல் திருத்தம் செய்யப்பட்டு, 2020-ஆம் ஆண்டில் போக்சோ விதிகளை அரசு அறிவித்தது.

தத்தெடுத்தலை முறைப்படுத்துவதற்காக ஆன்லைன் முறை ஒன்றை கேரிங்ஸ் என்னும் பெயரில் அரசு செயல்படுத்தியுள்ளது. 2016-17-ஆம் ஆண்டில் இருந்து 2020-21 (2021 பிப்ரவரி 3) வரை 725 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். 6 மாதங்கள் முதல் 6 வருடங்கள் வயது வரையிலான குழந்தைகளுக்காக தேசிய தொட்டில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 1724 குழந்தைகள் காப்பகங்களுக்கு 2017-18-ஆம் ஆண்டில் ரூ. 4,10,13,960.00 வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்களுக்கு குடிதண்ணீர், கழிவறை உட்பட பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகின்றன.

குழந்தைகள் பாதுகாப்பு சேவைகளுக்கு 2017-18-ஆம் ஆண்டில் ரூ 52469.95 லட்சமும், 2018-19-ஆம் ஆண்டில் ரூ 73451.70 லட்சமும், 2019-20-ஆம் ஆண்டில் ரூ 74546.32 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.

Similar News