15 வருடங்களில் 3 மடங்காக உயர்ந்த புயல் பாதிப்புகள்.. அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்.!

15 வருடங்களில் 3 மடங்காக உயர்ந்த புயல் பாதிப்புகள்.. அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்.!

Update: 2020-12-11 19:38 GMT

சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2005 முதல் இந்தியாவின் 75 சதவீதம் மாவட்டங்கள் மோசமான வானிலை மாற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போதையை உலகம் சுற்றுச்சூழலால் பாதித்து வருகிறது. புவி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் நோக்கி அதிகரித்து வருவதாக ஐ.நா., சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை ஒரு பக்கம் எச்சரித்துள்ளது. 

இந்நிலையில், எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில், பருவநிலை மாற்றங்களால் இந்தியா பேரழிவு தரும் விளைவுகளை எதிர்கொண்டு வருவதாக சுட்டிகாட்டப்பட்டது. மேலும் கூறியதாவது: 1970 மற்றும் 2005க்கு இடையில் வறட்சி, புயல், வெள்ளம் போன்ற 250 தீவிர காலநிலை நிகழ்வுகளை இந்தியா பார்த்துள்ளது.

2005 க்குப் பிறகு மட்டும் இது போன்று 310 நிகழ்வுகள் நடந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40 சதவீதம் மாவட்டங்கள் தற்போது வறட்சியால் பாதிக்கப்படுகின்றன. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 3 மடங்காக உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Similar News