தனித்து நிற்கும் திருவள்ளுவரின் கோட்பாடுகள்: பிரதமர் மோடி புகழாரம்!

Update: 2022-01-15 06:35 GMT

உலக பொதுமறையாக திகழும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றுகின்ற வகையில் வருடம்தோறும் தை மாதம் 2ம் தேதி திருவள்ளுர் தினமாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு இந்திய பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், 'திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை.

பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News