பாரதியார் 100வது நினைவு நாளில் வணங்குகிறேன் ! - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்விட்!
நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தமிழில் ட்விட் செய்திருந்தார்.
நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தமிழில் ட்விட் செய்திருந்தார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்விட் செய்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது: 'புகழ்பெற்ற இந்திய கவிஞர், எழுத்தாளர் & சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு தினத்தில் நான் அவரை வணங்குகிறேன்! பாரதியாரின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு எண்ணற்ற மக்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவருடைய எண்ணங்கள் பல தலைமுறைகளுக்கு நமக்கு ஊக்கமளிக்கும்.' இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Central Home minister Amithsha