வெவ்வேறு தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: ICMR ஆய்வு தகவல் !

வெவ்வேறு நிறுவனத்தின் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ICMR ஆய்வு தகவல்.

Update: 2021-08-08 13:07 GMT

ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புதிது புதிதான விஷயங்களை வெளி உலகத்திற்கு கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது அந்த கொரோனவைரஸ் எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது. இதுபற்றி தற்பொழுது ICMR ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் கூறுகையில், ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி, மற்றொரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி என வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று ICMR தெரிவித்திருக்கிறது. 


இந்தியாவின் மருந்து ஒழுங்குபடுத்தும் நிபுணர் குழு இதுபற்றி மேலும் கூறுகையில், கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடத்த கடந்த மாதம் பரிந்துரைத்தது. வைரஸ் வெக்டர் பிளாட்ஃபார்ம் அடிப்படையிலான ஆய்வில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை இணைத்து பயன்படுத்தினால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், இருவேறு தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது என்று ICMR தெரிவித்துள்ளது.


மேலும் இது தொடர்பாக, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC) இத்தகைய ஆய்வை நடத்த அனுமதி கோரிய பிறகு இந்தியாவின் மருந்து ஒழுங்குபடுத்தும் நிபுணர் குழுவினர் இடம் பரிந்துரையை செய்தது. விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசியை கலந்து 300 ஆரோக்கியமான தன்னார்வலர்களிடம் 4வது கட்ட மருத்துவ பரிசோதனை செய்ய வேலூர் CMC-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான முடிவுகள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரியவருகிறது. 

Input: https://indianexpress.com/article/india/india-new-covid-deaths-cases-third-wave-vaccine-7443962/

Image courtesy: indian express 


Tags:    

Similar News