சட்ட விரோத கடன் செயலிகள் தடையா? ரிசர்வ் வங்கியுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை!
சட்ட விரோதமான கடன் செயலிகளுக்கு தடை விதித்து பிரசவ வங்கி அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை.
இந்தியாவில் சட்டவிரோத கடன் செயல்களுக்கு தடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். உடனடி கடன் என்ற பெயரின் மக்களுக்கு கடன் கொடுத்து, பின்னர் மிரட்டி பணம் வாங்கும் போன் செல்போன் செயலிகள் அதிகரித்து வருகின்றன. கோகோ லோன், ஜோஜோ லோன் என பல்வேறு செயல்கள் இவ்வாறு கடன் வழங்கி வருகின்றனர்.
இந்த செயலிகளின் பின்னணியில் சீன நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் கைவரிசை அடங்கி உள்ளது. இந்த செயலிகள் மீதான புகார்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனவே இந்த கடன் மோசடியில் ஈடுபட்டு வரும் செயலிகள் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ஏராளமான கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த மாதிரியான சட்டவிரோதம் கடன் செயல்களை இந்தியாவில் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் இதற்கான நிதி அமைச்சக அதிகாரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி மேலும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சர் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் குறைந்த வருவாய் கொண்ட ஏழை மக்களுக்கு கடன் கொடுத்து வரும் இந்த கடன் செயலிகள் அதிக வட்டி திரும்ப வசூலிப்பதுடன் மிரட்டல், குற்ற செயல்களிலும் ஈடுபட்டு வருவது கவலை அளிக்கிறது. இந்த செயல்களின் மூலமாக நிதி மோசடி, வரியைப்பு, தகவல் சுரண்டல், போலி நிறுவனங்கள் உள்ளிட்ட குற்ற செயல்களும் நடைபெறுவதில் அவர் சுட்டிக் காட்டினார்.
Input & Image courtesy: The Hindu