இந்திய எல்லையில் ரகசிய சுரங்கப்பாதை - அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதியா?
இந்தியாவில் ரகசிய சுரங்கப்பாதை அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க ரகசியத் திட்டம்.
இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளை ஒட்டியுள்ள ரகசிய சுரங்கப்பாதை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அடுத்த மாதம் தொடர்புகொள்ள அமர்நாத் யாத்திரையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாகவும் வெளியான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதன் காரணமாக அங்கு தீவிர சோதனை பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு உள்ளார்கள்.
இந்தியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மாநிலம் ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் எல்லைப் பகுதியின் வேலிக்கு அருகில் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டது. புதிதாக தோண்டப்பட்டிருக்கும் 2 அடி அகலமுடைய இந்த சுரங்கம், 150 அடி நீளத்தில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து தோண்டப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதையை கண்டுபிடித்ததன் மூலம், அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப் பட்டுள்ளது. ஆனால் இது தற்காலிகமானது தான் என்று கருதப்படுகிறது. இந்த சுரங்கத்திலிருந்து இதுவரை சுமார் 21 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 5வது சுரங்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy:Thanthi News