சிவசேனா தலைவர்களின் தலைக்கு குறிவைத்த 'தாவூத் இப்ராஹிம்' தனிப்படை! - பகீர் ரிப்போர்ட்
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளுக்குச் சொந்தமான 20 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி திடீரென்று சோதனை நடத்தியுள்ளது.
மும்பையில் கடந்த பிப்ரவரி மாதம், என்.ஐ.ஏ., தாவூத் கூட்டாளிகளுக்கு எதிரான வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து அமலாக்கப்பிரிவு மும்பை மாநகரில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளுக்கு எதிரான சோதனையில் ஈடுபட்டது. அப்போது கிடைத்த மிக முக்கிய தகவலின்படி, தாவூத் இப்ராஹிம் சகோதரியிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக நிலம் வாங்கிய தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், மீண்டும் இன்று அதிகாலை நேரத்தில் என்.ஐ.ஏ., மும்பையில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளுக்குச் சொந்தமான 20 இடங்களில் சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில், தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது ஆட்கள் மிக முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதலை நடத்துவதற்கு திட்டம் தீட்டியுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன்படி அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய நபர்களை துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் மூலமாக கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.
இதற்காக பிரத்யேக பயிற்சி எடுத்த நபர்களை அமைத்து தனிப்படை அமைத்திருக்கிறார். இதில் சிவசேனா தலைவர்களும் இடம்பெற்றிருப்பதால் மகாராஷ்டிரா மாநில அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி நாட்டின் மிக முக்கிய நகரங்களிலும் தாக்குதலை நடத்தவும் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
Source: Vikatan
Image Courtesy: Daily Thanthi