பாதுகாப்பு துறையில் பெண்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் - மத்திய அரசு!
பாதுகாப்பு துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க மத்திய அரசு தற்போது நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
ராணுவத்தில் பெண்களுக்கான பதவி தற்பொழுது அதிகரித்துப் பெரும் சூழ்நிலையில் கடற்படை மற்றும் விமானப்படையில் பாலின சமத்துவ அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறது. பாராளுமன்றத்தில் மக்களவையின் உறுப்பினர்கள் கேள்வி ஒன்றுக்கு பாதுகாப்புத்துறை இணை மந்திரி அஜய் பட் எழுத்து மூலமாக தற்போது பதில் ஒன்றை அடைத்துள்ளார். குறிப்பாக மத்திய அரசு பாதுகாப்பு துறையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்க வைத்துள்ளார்கள்.
அந்த கோரிக்கை மத்திய அரசு தற்போது பரிந்துரைத்து உள்ளது. பாதுகாப்பு துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க, அரசு பலன் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். முப்படைகளின் பெண்களை ஈடுபடுத்துவதில் சீரான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு குறைவாகவே ஈடுபட்டு இருப்பது ஏன்? என குறித்த ஆய்வு தற்போது மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால் இனி வருங்காலத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான பதவி எதுவும் காலியாக இல்லை. கடற்படை மற்றும் இந்திய விமானப்படைகளில் அனுமதிக்கப்பட்ட பதவிகள் அனைத்தும் சமத்துவ அடிப்படையில் நிரப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். எனவே பாதுகாப்பு துறையில் வருங்காலத்தில் பெண்கள் பங்களிப்பு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து இருக்கிறார்.
Input & Image courtesy: Maalaimalar