தற்சார்பு இந்தியா நிதியுதவி திட்ட முன்னேற்றங்கள்: மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆய்வு.!

தற்சார்பு இந்தியா நிதியுதவி திட்ட முன்னேற்றங்கள்: மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆய்வு.!

Update: 2020-12-15 15:22 GMT

நாட்டில் கொரோனாதொற்றை எதிர்த்து போராட, சிறப்பு பொருளாதார நிதியுதவி திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் சென்ற ஏப்ரல் மாதம் அறிவித்தார்.  அப்போது அவர் நாட்டை பொருளாதரத்தில் இருந்து தற்சார்பு முறைகளில் மீட்டெடுக்க ரூ.20 இலட்சம் கோடி மதிப்பில் பல துறைகளையும் நிமிர வைக்கும் திட்டங்களை அறிவித்தார். அப்போது தற்சார்பு இந்தியா இயக்கத்துக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

பொருளாதாரம், உள் கட்டமைப்பு, முறையான அமைப்பு, துடிப்பான மக்கள் மற்றும் தேவை ஆகியவை தற்சார்பு இந்தியாவின் 5 தூண்கள் எனவும் அப்போது பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமரின் இந்த அழைப்பை தொடர்ந்து, தற்சார்பு இந்தியா நிதியுதவி திட்டம் 1.0- ஐ 13 மற்றும் 17ம் தேதிகளில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தற்சார்பு இந்தியா நிதியுதவி திட்டம் 2.0-ஐ கடந்த அக்டோபர் 12ம் தேதியும் மற்றும் நிதியுதவி திட்டம் 3.0-ஐ நவம்பர் 12ம் தேதியும் அறிவித்தார். 

இதில் நிதியதவி திட்டம் 3.0- ஐ அமல்படுத்தும் நடவடிக்கையை, சம்மந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் உடனடியாக தொடங்கின. 

இதன் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் மற்றும் கண்காணிக்கும் பணிகள் முறையாக நடக்கின்றன.

இந்த தற்சார்பு இந்திய நிதியுதவி திட்டங்கள் அமலாக்கப்படும் பணிகள் குறித்து மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 3 நாட்களாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அதன் பிறகு இத்திட்டத்தை அமல்படுத்தியதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் முக்கிய அம்சங்கள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது.

அதன்படி  குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உட்பட வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி பிணையில்லா கடன்கள் வழங்கும் பணிகளின் முன்னேறம் குறித்தும், வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு, ரூ.45,000 கோடி அளவு வட்டி உத்திரவாத திட்டம் மேற்கொள்ளப்படும் திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார். 

அதேபோல,  விவசாயிகளுக்கு நபார்டு வங்கிமூலம் ரூ.30,000 கோடி கூடுதல் அவசரகால மூலதன நிதி வழங்கப்பட்டுள்ளது. விவசாய கடன் அட்டைகள் மூலம், 2.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு கடன் வட்டி சலுகை அளித்தது,  

வரி செலுத்துவோர் 89.29 லட்சம் பேருக்கு, கூடுதலாக செலுத்தப்பட்ட வரி ரூ.1,45,619 கோடி திருப்பி அளித்தது, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு, ரூ.18,000 கோடி கூடுதல் நிதி , வேளாண் கட்டமைப்பை மேம்படுத்த  ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடி குறித்தும் ஆய்வு செய்தார்.  

மேலும் கால்நடை வளர்ப்புகட்டமைப்பை மேம்படுத்த ரூ.15,000 கோடி. தற்சார்பு இந்தியா நிதியுதவி திட்ட  அமலாக்கம் குறித்து, சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களுடன் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

Similar News