உலக புதுமை குறியீடு தரவரிசையில் முன்னேற்றம் அடைந்த இந்தியா!
உலக புதுமை குறியீட்டுத் தர வரிசையில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.
ஜெனிவாவில் உள்ள உலக அறிவு சார் சொத்து அமைப்பு ஆண்டுதோறும் உலக அளவில் புதுமை குறியீட்டு எண் தரவரிசையை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 132 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா தனது நாற்பதாவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.
கடந்த ஆண்டும் நாற்பதாவது இடத்தில் தான் இருந்தது கடந்த 2015 ஆம் ஆண்டு 81 வது இடத்தில் இருந்த இந்தியா தொடர்ந்து முன்னேறி நாற்பதாவது இடத்தை அடைந்திருப்பதாக 'நிதி ஆயோக்' தெரிவித்துள்ளது. அறிவு சார் மூலதனம் , துடிப்பான ஸ்டாட் ஆப் திட்டம், பொது தனியார் ஆராய்ச்சி அமைப்புகளின் பணிகள் ஆகியவற்றால் இடம் தக்கவைக்கப்பட்டதாக கூறியுள்ளது.
SOURCE :DAILY THANTHI