இந்தியாவில் முதல் முறையாக ராணுவ விமானத்தை தனியார் நிறுவனம் தயாரிக்கிறது ! எந்த நிறுவனம் தெரியுமா ?
நேற்று முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது !
ரூபாய் 20,000 கோடியில் 56 ராணுவத்துக்கான சரக்கு விமானங்களை கொள்முதல் செய்வதற்காக ஏர்பஸ் டிஃபன்ஸ் அண்ட் ஸ்பேஸ் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.அக் கூட்டத்தில் பல முக்கிய ஒப்பந்தம் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது. அந்தவகையில் நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 ராணுவ விமானங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. நேற்று அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஸ்பெயினில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து அடுத்த நான்கு ஆண்டுகளில் 16 விமானங்கள் இந்தியாவை வந்தடையும். மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவிலுள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்.
ஆகையால் ஏர்பஸ் நிறுவனத்துக்கும் டாட்டா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவில் ராணுவ விமானத்தை தனியார் நிறுவனம் தயாரிப்பது இதுவே முதல் முறையாகும். அந்தப் பெருமையை டாடா நிறுவனம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் முடிவாகி பின்பு டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கு டாடா அறக்கட்டளை தலைவர் ரத்தன் டாடா வாழ்த்து தெரிவித்தார்.
Image : Aero Time, EPICOS