இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்பை வலுப்படுத்த முயற்சி: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு!
இந்தியா-இலங்கை இடையேயான பாதுகாப்பு உறவை பலப்படுத்த இருநாட்டு பாதுகாப்புச் செயலாளர்கள் ஒப்புதல்.
இந்தியா-இலங்கை இடையே 7-வது வருடாந்திர பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை பிப்ரவரி 24 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாதுகாப்புத் துறை செயலாளர் கிரிதர் அரமானே, இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் ஜென்ரல் கமல் குணரத்னே ஆகியோர் தலைமை வகித்தனர். இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டுப் பயிற்சியின் போது இருநாடுகளும் தங்களது அனுபவங்களையும் திறன்களையும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. இப்பேச்சுவார்த்தை ஆரோக்கியமான முறையில் நடைபெற்றதற்காக ஜென்ரல் கமல் குணரத்னே மற்றும் அவருடைய பிரதிநிதிகளுக்கு கிரிதர் அரமானே நன்றி தெரிவித்துக் கொண்டார். பேச்சுகளின்போது மேற்கொள்ளப்பட்ட பொதுவான ஒப்பந்தங்களின் அடிப்படையில் இப்பேச்சுக்களை தொடர்ந்து மேற்கொள்ளவும், பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை ஒப்புக்கொள்ள பட்டுள்ளது.
மேலும் வலுப்படுத்தவும் இந்தியா-இலங்கை ஒப்புக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார். இந்திய மற்றும் இலங்கைக்கிடையில் தற்பொழுது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்தியா தற்பொழுது முக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேச்சு வார்த்தைகளை நடத்தி முடித்து இருக்கிறது. இந்தியா தன்னுடைய அண்டை நாடான இலங்கைக்கு பல்வேறு முக்கியத்துவங்களை தந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News