உலகின் ஒளிவிளக்காக இந்தியா திகழ்கிறது - ஜி 20 மாநாட்டில் பிரதமர் பெருமிதம்!

உலகின் ஒளி விளக்காக இந்திய திகழ்வதாக பிரதமர் மோடி கூறுகிறார்.

Update: 2022-11-16 07:34 GMT

G20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தோனேசியா பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த பயணத்தின் போது இரண்டு நாள் பயணமாக பல்வேறு தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சந்தித்தார். அடுத்த ஆண்டு தலைமை பகுதி பொறுப்பை இந்தியா ஏற்க இருக்கிறது. டிசம்பரில் இந்த பொறுப்பை இந்தியா ஏற்று வழிநடத்தும் என்று தெரியப்படுகிறது. இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள், 21 ஆம் நூற்றாண்டின் உலகின் நம்பிக்கை ஒளியாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவும், இந்தோனேஷியாவும் நீண்ட கால வரலாற்று தொடர்புகளை கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். நான் இந்தோனேசியாவில் இங்கு பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில் இந்தியாவில் உள்ள கச்சத்தீவில் பாலி யாத்திர நிகழ்ச்சி நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் இடையான வணிக வர்த்தக உறவுகள் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றில் இந்தியாவுடன், இந்தோனேஷியா ஒருங்கிணைந்த பண்பாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தோனேஷியாவிற்கு உதவியாக இந்தியா பல்வேறு நன்மைகளை செய்து இருக்கிறது. அதேபோன்று இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஆதரவாக பல்வேறு சமயங்களில் நடந்து இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா தன்னுடைய சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருக்கிறது. அடுத்த இரண்டு நாட்கள் கழித்து ஆகஸ்ட் 17ஆம் தேதி இந்தோனேஷியாவும் தன்னுடைய சுதந்திர தினத்தை கொண்டாடும். 75 ஆண்டுகள் தினத்தில் இந்தியாவில் பல்வேறு உதவிகளை இந்தோனேசியாவிற்கு செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News