பழங்குடியினர் வளர்ச்சிக்காக 15,000 கோடியில் புதிய திட்டம்: நிதி அமைச்சரின் அசத்தலான அறிவிப்பு!
பழங்குடியினரின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்காக 15 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும்.
மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 11 மணி அளவில் இருந்து தற்பொழுது பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டு இருக்கிறார். குறிப்பாக பல்வேறு தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் முக்கியமான அம்சங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பழங்குடியினரின் வளர்ச்சிக்காக மத்திய அரசு கடந்த காலங்களில் இருந்து குரல் கொடுத்து வருகின்றது. அதனை நிரூபிக்கும் விதமாக தற்போதைய பட்ஜெட்டில் பழங்குடியினர் நலன்கள் மற்றும் வளர்ச்சிக்காக 15 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்து இருக்கிறார்.
நம்முடைய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர், அவர் தற்பொழுது ஜனாதிபதியாக இருப்பது ஒட்டுமொத்த இந்திய அரசியலமைப்பும் பெருமைப்பட வேண்டிய ஒரு தருணமாக இருப்பதாக ஏற்கனவே பிரதமர் மோடி அவர்கள் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.