சாமானிய மக்களுக்காக சட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்!
சாமானிய மக்களுக்கான சட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளது உரிய நேரத்தில் நிதி கிடப்பதை உறுதி செய்து இருக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.
நவம்பர் 26 ஆம் தேதி இந்தியா தனது அரசியல் சாசன தின விழாவை கொண்டாடி வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் இந்தியா கடந்து வந்த பாதையைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அரசியல் சாசன தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறுகையில், மும்பை பயங்கரவாத தாக்குதல் நினைவு தினம் இன்று. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் அரசியல் சாசனத்தையும் மக்களின் குடியுரிமைகளையும் கொண்டாடிய பொழுது மனித குலத்தின் எதிரிகள் இந்தியாவின் மீது பெரிய பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி நாள் இன்று.
தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டு தனது உரையை தொடங்கினார். இன்றைய சர்வதேச சூழ்நிலைகளில் ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. ஏனெனில் இந்தியா அதிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், அதிக வேகமான பொருளாதாரமாக உள்ள நிலையில் ஒட்டுமொத்த உலகம் மிகுந்த எதிர்பார்ப்புடன் நம்மை உற்று நோக்குவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவிற்கு புதிய வாய்ப்புகள் தற்போது வந்து கொண்டு இருக்கின்றன. பல தடைகளை தாண்டி இந்தியா தற்பொழுது முன்னேறி வருகிறது.
இன்னும் ஒரு வாரத்தில் G20 அமைப்புகளின் தலைமை பொறுப்பில் இந்தியா அமர உள்ளது. நம் இந்தியாவின் மதிப்பு உலக நாடுகள் நாடுகளில் முன்னிறுத்தி பங்களிப்பை கொண்டு வர வேண்டும். சரியான நேரத்தில் அனைவருக்கும் நீதி கிடைப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது துவங்கப்பட்டுள்ள மின்னணு முயற்சிகள் போன்றவை நீதித்துறையின் மாற்றம் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏழைகளுக்கு ஆதரவாக கொள்கைகள் மற்றும் நாட்டின் ஏழைகள் மற்றும் பெண்கள் ஆகியோரை கைதூக்கி விடுவதற்கு அரசு உதவுகிறது. சாமானிய மக்களை சட்டம் சென்றடைய அவை எளிமையாக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய நீதித்துறை நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar