இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2021-09-07 06:23 GMT

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் பதிவான கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் 31,222 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,58,843 ஆக உயர்ந்துள்ளது. 

அதே போன்று நேற்று 290 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 441042 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தொற்றில் இருந்து ஒரே நாளில் 42942 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,22,24,937 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 3,92,864 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 69,90,62,776 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்பட்டுள்ளது. விரைவில் கொரோனா தொற்று இல்லா நாடாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Source: Dinakaran

Image Courtesy:The Financial Express


Tags:    

Similar News