இந்தியாவில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைவு.!

சற்று ஆறுதல் அளிக்கின்ற வகையில், கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை 4.01 லட்சம், நேற்று முன் தினம் 3.92 லட்சம், நேற்று 3.68 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-04 05:30 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் பரவி வரும் தொற்றால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.




 


இந்நிலையில், சற்று ஆறுதல் அளிக்கின்ற வகையில், கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை 4.01 லட்சம், நேற்று முன் தினம் 3.92 லட்சம், நேற்று 3.68 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஒரே நாளில் 3,449 பேர் தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 



மேலும், கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 289 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 2 கோடியே 02 லட்சத்து 82 ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,66,13,292 ஆக உள்ளது.

Similar News