இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 6,148 பேர் உயிரிழப்பு.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா தொற்று குறித்த நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.;

Update: 2021-06-10 06:31 GMT

இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா தொற்று குறித்த நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.




 


அதில் கூறியிருப்பதாவது "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 94,052 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே 6,148 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதான் அதிகபட்ச உயிரிழப்பு ஆகும். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,59,676 ஆக உயர்ந்துள்ளது.


 



மேலும், 1,51,367 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,76,55,493 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 11,67,952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 23,90,58,360 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News