தெற்கு ஆசியாவில் புதிய மைல்கல்: ட்ரோன் மூலம் தடுப்பு மருந்து விநியோகித்த இந்தியா!

தெற்காசிய நாடுகளில் இந்தியா தற்போது ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்தியாவில் தடுப்பு மருந்துகளும் முழு வீச்சில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒரே நாளில் இரண்டு கோடிக்கும் அதிகமான பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2021-10-05 06:38 GMT

இந்நிலையில், விமானங்கள், லாரிகள், பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட போக்குவரத்து மூலமாக நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தடுப்பு மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் புதிய பரிசோதனையாக ட்ரோன்கள் மூலமாக கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் செய்யப்படுகிறது. ஆளில்லா ட்ரோன் மூலமாக தடுப்பு மருந்தை விநியோகிப்பது பற்றி இந்திய மருத்துவத்துறை நீண்டகாலமாக ஆராய்ச்சி மேற்கொண்ள்ளது.

இது நடைமுறையில் சாத்தியப்படுமா என்று பரிசோதனை செய்து வந்த இந்திய விஞ்ஞானிகள் இதனை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர். அதாவது மணிப்பூர் மாநிலம், லோக்டர் ஏரியில் உள்ள மிதக்கும் தீவுகள் என்று அழைக்கப்படுகிறது. இதனிடையே அந்த பகுதிக்கு ஆளில்லா ட்ரோன் மூலமாக தடுப்பு மருந்தை உரிய நேரத்திற்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

இதுநாள் வரை எந்த ஒரு தெற்காசிய நாடும் ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு சென்றதில்லை. இது குறித்து பரிசோதனையும் செய்து பார்க்கவில்லை. ஆனால் இந்திய மருத்துவத்துறையின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Source, Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2860433

Tags:    

Similar News