G20யின் தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியா: G7 நாடுகள் வழங்கும் ஆதரவு!

ஜி20-யின் தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியாவிற்கு தற்பொழுது G7 நாடுகள் தனது ஆதரவை வழங்கி இருக்கிறது.

Update: 2022-12-15 05:33 GMT

ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு பெற்றுள்ள இந்தியாவிற்கு ஆதரவு அளிப்பதாக ஜி7 நாடுகள் தலைவர்கள் தற்போது தெரிவித்து இருக்கிறார்கள். குறிப்பாக ஜி7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முக்கிய முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. குறிப்பாக ஜி 7 நாடுகள் தலைமை கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜெர்மனியின் தலைமையின் கீழ் நாங்கள் அதாவது ஜி 7 நாடுகள் பிற உலக நாடுகளுடன் இணைந்து பெரும் அமைப்பு ரீதியான சவால்கள் மற்றும் உடனடி சிக்கல்களுக்கு இணைத்து தீர்வு காண உறுதி ஏற்று உள்ளோம்.


எங்களுடைய முயற்சிகள் மற்றும் செயல்பாடுகள் சமமாக உலகை நோக்கி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். வரும் 2023 ஜப்பான் தலைமையில் ஹிரோஷிமாவில் ஜி7 உச்ச மாநாடு நடைபெற உள்ள நிலையில், ஜி-20 காண இந்தியாவின் தலைமைக்கு எங்களுடைய ஆதரவுடன் அமைதியாக அனைவருக்கும் நீடித்த எதிர்காலம் மறு கட்டமைப்பை நாங்கள் உறுதியுடன் ஒற்றுமையில் இருந்து இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


மேலும் உலகின் மேம்பட்ட பொருளாதார நாடுகளின் கூட்டமைப்புகள்  இந்தியாவிற்கு  ஆதரவாக இருக்கிறது. ஜி 7 நாடுகள் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இத்தாலி,பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளடக்கியது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News