குடும்ப கட்டுப்பாடு செயலாக்க சர்வதேச விருது பெற்ற முதல் நாடு இந்தியா: மோடி அரசின் சாதனை!

குடும்ப கட்டுப்பாடு செயலாக்கத்தின் சர்வதேச பெறுதல் பெற்ற முதல் மற்றும் ஒரே நாடு இந்தியா மட்டும் தான்.

Update: 2022-11-21 02:08 GMT

குடும்ப கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்திற்கான விருதை இந்தியா வென்றுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்கு மாண்டவியா தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், குடும்ப கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்திற்கு விருது 2022 தாய்லாந்தில் நடைபெற்றது. குடும்ப கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இந்த விருது இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. இந்த விருது பெற்ற முதல் நாடு இந்தியாவாகும்.


சரியாக தகவல் மற்றும் நம்பகமான தேவைகளின் அடிப்படையில் தரமான குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை அனுப்புவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. மேலும் இது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல்பாட்டிற்கு கிடைத்த அங்கீகாரம். நவீன குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை அமல்படுத்தும் இந்தியாவின் மிகச் சொல்லி குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் அதற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த விருது பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.


குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் திருமணம் ஆன பெண்களின் சதவீதமானது 2015- இல் 66- இல் இருந்து, 2021 76 ஆக சதவீதமாக அதிகரித்தது. ஆனால் உலக அளவில் 2030க்குள் இந்த சதவீதம் 75 ஆக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த வேளையில் இந்தியா இதனை முன்கூட்டியே அடைந்து இருக்கிறது. பரிவார் விகாஸ் எனும் திட்டத்தின் மூலமாக மக்களுக்கு மோடி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இதன் காரணமாக நூற்றி இருவதற்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News