தொழில்நுட்பம் மக்களுக்கு எளிதான வாழ்க்கையை வழங்குகிறது: பிரதமர் கூறியதன் பின்னணி என்ன?
மக்களுக்கு எளிதான வாழ்க்கையை வழங்க தொழில்நுட்பத்துக்கு மிகுந்த முக்கியத்துவத்தை இந்தியா அளிக்கிறது.
மக்கள் சிரமமின்றி எளிதாக வாழ்வதற்கு ஏற்றவகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து 2 கிலோ எடையுள்ள காசநோய் மருந்துகளை 40 கி.மீ. தொலைவில் உள்ள டெஹ்ரி கர்வால் மாவட்ட மருத்துவமனைக்கு 30 நிமிடத்தில் கொண்டு செல்ல ஆளில்லா விமானங்களை சோதனை அடிப்படையில் பயன்படுத்தியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
பிரதமரின் ட்விட்டர் பதிவில் கூறுகையில், "மக்களுக்கு மேலும் 'எளிதாக வாழ்வதற்கு' தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியாவில் இருக்கும் மக்கள் தற்போது தொழில்நுட்பத்தின் உதவியுடன் தங்கள் வீட்டில் பல்வேறு விதமான சேவைகளை பெறுகிறார்கள்.
தற்போது மருத்துவத் துறையில் ட்ரோன்களை பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. ட்ரோன்களை பயன்படுத்துவதன் மூலமாக வெளித்தாகவும் விரைவாகவும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்ல முடிகிறது. இந்தியாவில் இருக்கும் மக்கள் தற்பொழுது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News