பாகிஸ்தானில் இந்து கோவில் தாக்குதல் - இந்தியா கடும் கண்டனம்

கராச்சியில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-10 05:27 GMT

கராச்சியில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கராச்சி நகரில் இந்து கோவில்கள் மீது தீவிரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோரங்கி பகுதியில் ஸ்ரீ மாரி மாதா கோவில் உள்ளது அதன் அருகில் இந்து கோவில் பூசாரி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் இருந்து 8 பேர் கொண்ட கும்பல் கோவில் வளாகத்தில் மீது தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் பூசாரியின் வீட்டையும் அங்கிருந்த சிலைகளையும் அந்த கும்பல் சேதப்படுத்தியுள்ளனர். இந்த பகுதியில் இந்த தாக்குதலின் காரணமாக வசிக்கும் இந்துக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது, 'கராச்சியில் உள்ள இந்துக்கள் ஆலயம் சேதம் செய்யப்பட்ட சம்பவத்தை மத்திய அரசு கவனித்து வருவதாகவும், இந்து மத சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தலின் மற்றொரு செயல் என்றும் குறிப்பிட்டார். சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தி உள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.


Source - Maalai Malar

Similar News