கொரோனாக்கு எதிராக உள்நாட்டிலேயே 4 தடுப்பூசிகள் கண்டுபிடித்த ஒரே நாடு இந்தியா!

இந்தியா 2 ஆண்டுகளில் கொரோனாக்கு உள்நாட்டிலேயே நான்கு தடுப்பூசிகளை தயாரித்துள்ளது.

Update: 2023-01-29 01:02 GMT

பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையின் கீழ் இந்தியா இரண்டு ஆண்டுகளில் கோவிட் 19-க்கு உள்நாட்டிலேயே நான்கு தடுப்பூசிகளை தயாரித்துள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உள்ள உயிரி தொழில்நுட்பத் துறை மூலம் கோவிட் சுரக்ஷா இயக்கத்தின்கீழ்’ நான்கு தடுப்பூசிகள் தயார் செய்யப்பட்டுள்ளது.


மேலும், வருங்காலத்தில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தடுப்பூசி தயார் செய்யப்படுவதற்கான உள்கட்டமைப்பு வசதி சிறப்பாக செயல்படும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, நமது நாடு இதுபோன்ற பெருந்தொற்றுக் காலங்களில் தயார்நிலையில் இருப்பது தெளிவாகிறது. இந்தியா புதிதாக உள்நாட்டிலேயே ZyCoV-D CORBEVAX, GEMCOVAC, iNOCOVACC போன்ற தடுப்பூசிகளை தயாரித்துள்ளது.


மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் ராஜேஷ் கோகலே மற்றும் துறையின் மூத்த அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பேசும்போது, கோவிட் சுரக்ஷா இயக்கத்தின்கீழ் தடுப்பூசி மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிபுணர்கள் மற்றும் தடுப்பூசி மேம்பாட்டு நடவடிக்கைகளை கண்காணித்தல் போன்றவற்றுக்கு தேவையான நிதி ஆதாரம் வழங்கப்படுகிறது என்றார். இந்த இயக்கத்திற்காக மத்திய அரசு தற்சார்பு இந்தியா 3.0 தொகுப்பின் கீழ், ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News