சீனா, பாகிஸ்தான் கூட்டாக வந்தாலும் திறம்பட எதிர்க்கும் சக்தி இந்தியாவுக்கு உண்டு!

சீனா, பாகிஸ்தான் கூட்டாக வந்தாலும் திறம்பட எதிர்க்கும் சக்தி இந்தியாவுக்கு உண்டு!

Update: 2021-01-12 17:16 GMT

பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து தேசிய பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கின்றன. மேலும் இந்தியாவை நோக்கிய அவர்களின் கூட்டு அணுகுமுறையை எச்சரிக்கையாக கையாள்வது அவசியம் என்று இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனே தெரிவித்தார்.

இராணுவ தினத்திற்கு முன்னதாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ஜெனரல் நாரவனே கிழக்கு லடாக்கின் நிலைமை குறித்து விரிவாக விளக்கினார். மேலும் பிராந்தியத்தில் எந்தவொரு நிகழ்வுகளையும் திறம்பட சமாளிக்க இந்திய வீரர்கள் மிக உயர்ந்த அளவிலான போர் தயார்நிலையை பராமரித்து வருவதாகவும் கூறினார்.

பரஸ்பர மற்றும் சமமான பாதுகாப்பின் அணுகுமுறையின் அடிப்படையில் இந்தியாவும் சீனாவும் படைவிலகல் குறித்த உடன்பாட்டை எட்ட முடியும் என்று தான் நம்புவதாக இராணுவத் தளபதி கூறினார். அதே நேரத்தில், ஜெனரல் நாரவனே, இந்திய இராணுவத்தால் பங்கோங் ஏரியின் தென் கரையில் சில மூலோபாய உயரங்களைக் கைப்பற்றி வைத்துள்ளதைப் பற்றி குறிப்பிடுகையில், கிழக்கு லடாக்கில் நமது படைகள் தேசிய நலன் மற்றும் குறிக்கோள்களின் அடிப்படையில் தனது நிலைப்பாட்டை தொடர்ந்து கடை பிடிக்கும் என்று கூறினார்.


 
ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பு சவால்களைப் பற்றி பேசிய இராணுவத் தலைவர், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் இந்தியா ஒருங்கிணைந்து அணுகுவது அதன் செயல்பாட்டில் வெளிப்படுகிறது என்றார்.
"பாகிஸ்தானும் சீனாவும் சேர்ந்து ஒரு சக்திவாய்ந்த அச்சுறுத்தலை உருவாக்குகின்றன. மேலும் கூட்டு அச்சுறுத்தலை நாம் விரும்ப முடியாது"  என்று அவர் கூறினார்.

ஒரே நேரத்தில் இருமுனை அச்சுறுத்தல் சூழ்நிலையை சமாளிக்க இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று இராணுவத் தளபதி வலியுறுத்தினார். இராணுவம் மற்றும் இராணுவம் அல்லாத துறைகளில் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது என்றார்.

பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை அரச கொள்கையின் கருவியாகப் பயன்படுத்துவதாகவும், இந்தியா தொடர்ந்து அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் என்றும் ஜெனரல் நாரவனே கூறினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு நாங்கள் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் துல்லியமாக பதிலளிக்கும் உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம் என அவர் மேலும் கூறினார். 

Similar News