எவ்வளவு நெருக்கடிகளையும் தாங்கும் சக்தி கொண்டது இந்தியா.. ஐ.நா., அறிக்கை.!

எவ்வளவு நெருக்கடிகளையும் தாங்கும் சக்தி கொண்டது இந்தியா.. ஐ.நா., அறிக்கை.!

Update: 2020-12-30 10:02 GMT

இந்திய பொருளாதாரம் நீண்ட காலத்தில், எவ்வளவு நெருக்கடிகளையும் தாங்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளின் அன்னிய நேரடி முதலீட்டு போக்குகள் மற்றும் கண்ணோட்டம் பற்றி யுனெஸ்காப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியா பகுதியில், நீண்ட காலத்தில், எத்தகைய பொருளாதார நெருக்கடிகளையும் சந்திக்கும் திறன் கொண்டதாக இந்திய பொருளாதாரம் அமைந்துள்ளது.

இந்த பகுதியில் அன்னிய நேரடி முதலீட்டில் 77 சதவீதம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் 2025ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு சேவைகள், மின்னணு உற்பத்தி போன்ற முக்கிய டிஜிட்டல் துறைகள், இரு மடங்கு வளர்ச்சியைக் பெறும்.

கொரோனா பரவலின்போது விவசாயத் துறை உள்ளிட்டவற்றில் டிஜிட்டல் பயன்பாடு அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து குறிப்பிடத்தக்க முதலீட்டு கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முழு காரணமும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பா.ஜ.க., அரசுதான் காரணம் என்று அனைவரும் அறிந்ததே. இரவு பகலாக, இந்த பாரத நாட்டிற்காக பிரதமர் உழைத்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் மற்ற நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டபோதிலும், இந்திய பொருளாதாரம் மிகவும் உயர்ந்து காணப்பட்டது. இன்னும் பல சாதனைகளை பிரதமர் மோடி காண்பார் என்று பொதுமக்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Similar News