இலங்கை விவசாயத்திற்கு உரம் வாங்க இந்திய மேலும் 55 மில்லியன் டாலர் கடனுதவி
உரம் இறக்குமதி செய்வதற்காக இலங்கைக்கு இந்தியா 55 மில்லியன் டாலர் கடனாக வழங்குகிறது.
உரம் இறக்குமதி செய்வதற்காக இலங்கைக்கு இந்தியா 55 மில்லியன் டாலர் கடனாக வழங்குகிறது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு திவால் ஆகி விட்ட நிலையில் உலக நாடுகள் கைவிட்டு விட்டன, இந்த நிலையில் இந்தியா பெருமளவில் உதவி செய்து வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டில் அறுவடை பருவத்திற்கு 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் வாங்க கடன் வழங்குமாறு இந்தியாவிடம் இலங்கை கேட்டுக்கொண்டது.
இந்தியாவிலிருந்து யூரியா உரம் இறக்குமதி செய்ய 55 மில்லியன் டாலர் கடனுதவி அளிக்க அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை நிதித்துறை செயலாளர் ஸ்ரீவர்தானே எஸ்சிம் வங்கி உடன் டாலர் கடன் உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.