புதிய ஆற்றலுடன் இந்தியா முன்னேறி வருகிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை!
81வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அந்த உரையில் அவர் பேசியதாவது: 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி புதிய ஆற்றலுடன் இந்தியா முன்னேறி செல்கிறது. தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுகிறது. 100 கோடி தடுப்பூசிக்கு பின்னர் எண்ணற்ற தன்னம்பிக்கை கதைகள் அடங்கியுள்ளது.
மேலும், பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் மக்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும். உள்ளூர் பொருட்களை வாங்கும்போது ஏழை வியாபாரிகளின் வீட்டில் பிரகாசம் ஏற்படும். அது மட்டுமின்றி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுகை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாளில் தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கும் ஒரு செயலிலாவது நாம் அனைவரும் ஈடுபட வேண்டும்.
மேலும், பகவான் பிர்சா முண்டாவின் ஜெயப்திரை இந்தியா கொண்டாட உள்ளது. அவரின் வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுத்தது ஒருவரின் சொந்த கலாச்சாரத்தைப் பற்றி எப்படி பெருமை கொள்வது, சமூகத்தை கவனித்து அநீதியை எதிர்த்துப் போராடுங்கள். இளைஞர்கள் அனைவரும் அவரைப் பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
Source, Image Courtesy: Daily Thanthi