அனைத்து திறன்கள் இருந்தும், இப்போது வரை எந்த நாட்டையும் தாக்காத ஒரே நாடு - இந்தியாவின் தலைமையில் அணி சேரும் உலக நாடுகள் !
Government making all efforts to develop capabilities to tackle emerging threats like cyber warfare
உலகில் மாறிவரும் பாதுகாப்பு முறைகளை சந்திக்க இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படை அதிகாரிகள் கல்லூரியில் பேசிய அவர், மத்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் காரணமாக உலகில் மாறிவரும் பாதுகாப்பு முறைகளை சந்திக்க இந்தியா தயாராக இருக்கிறது என்றார்.
மேலும், பாதுகாப்பு படைகள் முழு அளவிலான தளவாடங்களை பெற்றிருக்க வேண்டும் மற்றும் எல்லா நேரங்களிலும் தயாராக இருக்க வேண்டும். நாம் நமது ராணுவத்தை தொடர்ந்து பலப்படுத்துவோம். உலகளவில் மாறிவரும் பாதுகாப்பு சூழல்களுக்கு ஏற்ப, எந்த சவால்களையும் சந்திக்க நாம் ஒரு படி முன்னோக்கி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆப்கானிஸ்தான் நிலவரம் சவாலாக உள்ளது. அங்கு மாறும் சூழல்களால், ஒவ்வொரு நாடும் தனது யுக்தி பற்றி சிந்திக்க வைத்துள்ளது. இந்த பின்னணியில் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் அடங்கிய 'குவாட்' குழு உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய யுகத்தில், நாட்டின் பாதுகாப்பில் ஒவ்வொரு பரிமாணத்தையும் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. இந்த சவால்களை சமாளிக்கும் விதத்தில் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் கல்லூரி, எதிர்கால ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து தயார் படுத்தும்.
இந்தியாவிடம் அனைத்து திறன்கள் இருந்தாலும், இப்போது வரை எந்த நாட்டையும் தாக்கியதில்லை. ஒட்டு மொத்த உலகத்தையும், இந்தியா எப்போதும் தனது குடும்பமாகவே கருதுகிறது. அதேநேரத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை பாதுகாக்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என்று கூறினார்.