உலகிலேயே இந்தியாவில்தான் நீதித்துறை சுதந்திரமாக உள்ளது - மத்திய சட்ட அமைச்சர்
இந்தியாவைப் போல் சுதந்திரமான நீதித்துறை உலகில் வேறு எங்கும் இல்லை என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரஜ்ஜு கூறியுள்ளார்.
இந்தியாவைப் போல் சுதந்திரமான நீதித்துறை உலகில் வேறு எங்கும் இல்லை என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரஜ்ஜு கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.பி.சின்ஹா நினைவு சொற்பொழிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.ரமணா கலந்து கொண்டார் அப்போது பேசிய என்.வி.ரமணா கூறியதாவது, 'ஊடகங்களால் பரப்பப்படும் பாரபட்சமான கருத்துக்களை மக்கள் பாதிப்புடன் ஜனநாயகத்தையும் பலவீனப்படுத்துகின்றது இது போன்ற செயல்பாடுகளால் நீதி வழங்குவது மோசமாக பாதிக்கப்படுகிறது.
உங்கள் பொறுப்பை மீறுவதால் முதல் நீங்கள் நமது ஜனநாயகத்தின் இரண்டு படிகள் பின்னோக்கி எடுத்துச் செல்கிறீர்கள் என ஊடகங்கள் குறித்து பேசி இருந்தார்.
என்.வி.ரமணா'விடம் இருந்து இத்தகைய கருத்து வெளிவந்திருக்கும் நிலையில் இந்தியாவைப் போல் சுதந்திரமான நீதித்துறையை உலகிலேயே வேறு எங்கும் இல்லை என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரஜ்ஜு தெரிவித்திருக்கிறார்.
என்.வி.ரமணாவின் கருத்து குறித்து பேசிய கிரண் ரஜ்ஜு, 'இந்திய நீதிபதிகளில் மற்றும் நீதித்துறை முற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ளது இந்தியாவில் இருப்பது போல் உலகில் வேறு எங்கும் நீதிபதியும் நீதித்துறை சுதந்திரமாக இல்லை என என்னால் உறுதியாக கூற முடியும்' என்றார்.