விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி இந்தியா- தயாராகிறது 'சுக்ரயான்' விண்கலம்!
மங்கள்யான், சந்திரயான் விண்கலங்களைத் தொடர்ந்து வெள்ளி கிரக ஆய்வுக்காக அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
சந்திரயான்-3 திட்டத்தின் மூலமாக இமாலய சாதனை படைத்ததால் உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது.இந்த நிலையில் சந்தையான்-3 திட்டத்தின் வெற்றிக்கு பிறகு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இப்போது அதிக லட்சிய பயணங்களை இலக்காக கொண்டுள்ளது. குறிப்பாக வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 'சுக்ரயான்' என்ற விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
அதன் அடர்த்தியான வளிமண்டலத்தை ஆய்வு செய்வதே இந்த பணியின் நோக்கமாகும். சூரிய குடும்பத்தில் உள்ள 8 கிரகங்களில் பூமியில் மட்டுமே உயிர்கள் வாழ முடியும். இருந்தாலும் பூமியை தவிர வேறு எந்த கிரகத்தில் ஆவது உயிர் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதில் சனி மற்றும் வியாழன் கிரகங்களின் துணைக்கோள்கள் சிலவற்றை அடையாளம் கண்டு வைத்துள்ளனர் .அதேபோல் வெள்ளி உள்ளிட்ட சில கிரகங்களில் வசிக்கவே முடியாது என்ற நிலையும் உள்ளது.
சூரியனிலிருந்து இரண்டாவது இடத்தில் வெள்ளி கிரகம் இருப்பதால் சூரிய குடும்பத்திலேயே மிகவும் வெப்பமான கிரகமாக உள்ளது. இதனை இஸ்ரோ ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. வெள்ளி கிரக ஆய்வில் இந்தியாவின் சுக்ரயான் விண்கலம் திட்டத்தில் ஐரோப்பிய நாடான ஸ்வீடன் இணைந்துள்ளது. ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலனை அனுப்பிய அனுபவம் இருப்பதால் வெள்ளி கிரகத்திற்கு எளிதாக விண்கலனை அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கு உள்ளது.
SOURCE :DAILY THANTHI