2,000 மெட்ரிக் டன் அரிசியை சிரியாவிற்கு பரிசாக அளித்த இந்தியா!

2,000 மெட்ரிக் டன் அரிசியை சிரியாவிற்கு பரிசாக அளித்த இந்தியா!

Update: 2021-02-14 16:58 GMT

அரபு குடியரசின் வேண்டுகோளைத் தொடர்ந்து சிரியாவிற்கு இந்தியா 2000 மெட்ரிக் டன் மதிப்புள்ள அரிசி முட்டைகளை பரிசாக அளிக்க உள்ளதாக வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவுத் துறையின் சார்பில் இந்திய தெரிவித்திருந்தது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில்  கூறுகையில், "அவசரகால மனிதாபிமான அடிப்படையில், மேலும் உணவு பாதுகாப்புகாக சிரியா அரசின் கோரிக்கையை ஏற்று அவசர உதவிக்காக சுமார் 2,000 மெட்ரிக் டன் அரிசி முட்டைகளை இந்தியா பரிசாக வழங்கும்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இதில் முதல் 1,000 மெட்ரிக் டன் அரிசியை சிரியாவிற்கான இந்திய தூதர் ஹிஃப்ஸூர் ரஹ்மான் சிரியாவின் உள்ளாட்சி நிர்வாக அமைச்சர் ஹுசைன் மக்லூஃப் வியாழக்கிழமை  அன்று சிரியாவில் உள்ள லடாகியா துறைமுகத்தில் ஒப்படைத்தார் என்று MEA  வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 1000 மெட்ரிக் டன் அரிசி பிப்ரவரி 18 ஆம் தேதி சிரியாவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

IS தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிரியா போரில் ஆசாத்தின் அரசுப் படைகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆனால்  இந்தியா எப்பொழுதும் சிரியா மக்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என்றும், அந்த நாட்டில் உள்நாட்டு மோதல்களின் ஆண்டுகளில் கூட அதன் இருதரப்பு ஈடுபாடு விரைவாக தொடர்கிறது என்றும்  கூறியது. Covid-19 உதவியின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா சிரியாவிற்கு 10 மெட்ரிக் டன் மருந்துகளை பரிசாக அளித்ததாக MEA சார்பில் தெரிவித்துள்ளது. 

Similar News