அதிகமான கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் 3வது இடத்தில் இந்தியா.!
அதிகமான கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் 3வது இடத்தில் இந்தியா.!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி வெற்றிகரமாக கண்டுப்பிடிக்கப்பட்டு இந்தியாவில் முன்கள பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று மிகவும் வேகமாக குறைந்து வருகிறது. இதுவரை 1.09 கோடி பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1.06 கோடி பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1.37 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே தடுப்பூசி போடும் பணி மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. முதலில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை நாடு முழுவதும் 94,22,228 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலமாக அதிகமான எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் 3 வது இடத்தில் இந்தியா உள்ளது.
இதற்கான பணிகளை மத்திய சுகாதாரத்துறை நேரடி கண்காணிப்பில் இப்பணி நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டத்தில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.