நாக்பூரில் இந்திய அறிவியல் மாநாடு: ஜனவரி 3-ல் திறந்து வைக்கிறார் பிரதமர்!

ஜனவரி 3ஆம் தேதி நாக்பூரில் இந்திய அரசியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

Update: 2022-12-26 02:25 GMT

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாக்பூரில் ஜனவரி 3ஆம் தேதி இந்திய அறிவியல் மாநாடு ஜனவரி மாதம் நடைபெற இருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. ஆண்டுதோறும் நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள, ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கலந்து கொள்ளும் இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுவது வழக்கம்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இந்திய அறிவியல் மாநாட்டிற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இந்த அறிவியல் இந்திய அறிவியல் மாநாட்டின் போது இந்திய மாணவர்களுக்கு இடையே அறிவியல் குறித்த புதிய தாக்கத்தை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2023 ஜனவரி மூன்றாம் தேதி நாக்பூரில் தொடங்கும் மாநாடு ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பெண்களுக்காக அதிகாரம் அளித்ததுடன் நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்நுட்பம் என்னும் கருப்பொருளில் கீழ் இந்த மாநாடு நடைபெற இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாநாட்டு கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெற இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News