உங்க நாட்டில் உள்ள சிறுபான்மையின மக்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள் - பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!
முகமது நபிகர் பற்றி சர்ச்சை விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு கருத்து கூறியிருந்தது. அதில் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு பற்றி அறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
We have noted statements and comments from Pakistan. The absurdity of a serial violator of minority rights commenting on the treatment of minorities in another nation is not lost on anyone: Ministry of External Affairs (MEA) pic.twitter.com/e6046Vgwex
— ANI (@ANI) June 6, 2022
மத்திய அரசு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகள் மீறும் பாகிஸ்தான், இந்திய சிறுபான்மையினர் பற்றி கருத்து கூறியிருப்பது அபத்தமாக இருக்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
Our response to media queries regarding tweet by the Pakistani Prime Minister and statement by its Ministry of Foreign Affairs:https://t.co/bTcrX0WH4X pic.twitter.com/IfR4YdFnsO
— Arindam Bagchi (@MEAIndia) June 6, 2022
மேலும், பாகிஸ்தான் நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு பற்றி பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியை தவிர்ப்பது நல்லது. இந்தியாவில் வாழும் அனைத்து மதங்களுக்கும் இந்திய அரசு அதிகபட்ச மரியாதையை வழங்கி வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Abp